இந்திய விமான படையில் ஏர்மேன் குரூப் ஓய் பிரிவு(Airmen Group Y) பணியிடங்களுக்கான ஆள் சேர்ப்பு முகாம் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானம் டாக்டர் எம். ஜி. ஆர்.,  விளையாட்டரங்கில் நடைபெறுகிறது.

ஆள் சேர்ப்பு முகாம் நாள்:

08 ஏப்ரல் 2020  முதல் 17 ஏப்ரல் 2020  தேதி வரை நடக்கவுள்ளது.

 

வயது வரம்பு:

17.1.2000 முதல் 30.12.2003 வரை பிறந்தவர்கள் இதில் சேரலாம்.

கல்வி தகுதி:

பத்தாம்  மற்றும் பனிரெண்டாம்  வகுப்பு தேர்ச்சி

வகுப்புகளில் 50 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

165 செ.மீ., க்கு உயரம் குறையாதவராகவும் இருக்க வேண்டும்.

ஆள் சேர்ப்பு முகாமிற்கான  முன்னேற்பாடுகள் கூட்டம்

இந்த ஆள் சேர்ப்பு முகாமிற்கான  முன்னேற்பாடுகள் கூட்டம் கலெக்டர் வினய் தலைமையில் மதுரையில் சமீபத்தில் நடந்தது. கலெக்டர் கூறியுள்ளதாவது: முகாமில் பங்கேற்பவர்கள் எழுத்துத்தேர்வு, உடற்தகுதி தேர்வு நடக்கும். இதற்கான இடவசதி, முகாமில் பங்கேற்போருக்கு குடிநீர், சுகாதார வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் மூவாயிரம் பேர் அமரும் வகையில் பந்தல் அமைக்கப்படும். 24 மணி நேர மருத்துவ குழுவினரும், ஆம்புலன்ஸ் வசதிகளும் முகாம் நடக்கும் நாட்களில் தயார் நிலையில் இருக்கும்.

தமிழ், ஆங்கிலம் மற்றும்  ஹிந்தியில் பங்கேற்பாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்படும். முக்கிய பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷனிலிருந்து முகாம் நடக்குமிடத்திற்கு அரசு டவுன் பஸ் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தகுதியான இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம், என கூறியுள்ளார்.

 

மேலும் விவரங்களை  http://www.airmenselection.gov.in என்ற இணைய முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.