இந்திய ராணுவத்தில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு 2020

இந்திய ராணுவத்தில் இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு SSC Tech வேலைவாய்ப்பு Indian Army SSC OTA Recruitment 2020 அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 மொத்த காலியிடங்கள்: 191

  வயது வரம்பு:

வயது வரம்பு – 20 முதல் 27 வரை.

விண்ணப்பதாரர்கள், குறைந்தபட்சம் 20 வயது நிரம்பியவராகவும், அதிகபட்சமாக 27 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். ராணுவத்தில் உயிரிழந்தவர்களின் மனைவியாக இருப்பின், 35 வயது வரையில் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

 கல்வித்தகுதி:

ஏதேனும் ஓரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

பி.இ, அல்லது பி.டெக் முடித்திருத்தல் அவசியம்.

குறிப்பு:  

பொறியியல் இறுதியாண்டு படித்துக் கொண்டிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

 SSCW (Non Tech) (Non UPSC) பிரிவுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். SSCW(Tech) பிரிவில் சேர விரும்புகிறவர்கள், ஏதேனும் ஒரு துறையில் பி.இ, அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

இன்ஜினியரிங் இறுதியாண்டு படிக்கின்றவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆனால், 1 அக்டோபர் 2020 அன்று பி.இ தேர்ச்சிப் பெற்றதற்கான ஆதாரங்கள் வைத்திருக்க சமர்பிக்க வேண்டும். ராணுவ பயிற்சி தொடங்கி 12 வாரங்களுக்குள் இன்ஜினியரிங் முடித்த சான்றிதழ்களை சமர்பிக்க வேண்டும்.

 விண்ணப்பிக்கும் முறை:

இப்பணியிடத்தில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள்  www.joinindianarmy.nic.in  என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனைப் பூர்த்தி செய்து, பிப்ரவரி 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

 இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும்

http://www.joinindianarmy.nic.in/officers-notifications.htm

என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.