Tamil Nadu Uniformed Services Recruitment Board (TNUSRB) - Police Constable (PC)
1. Selection Process for TNUSRB - Police Constable (PC)
The Selection Process for TNUSRB – Police Constable (PC) are :-
- Written Examination
- Physical Efficiency Test
- Medical Test
2. Educational Qualification for TNUSRB - Police Constable (PC)
- 10th Pass
3. Age Limit for TNUSRB - Police Constable (PC)
The Age limit for TNUSRB – Police Constable (PC) are
Category | Age (in Years) |
---|---|
General | 18 - 26 |
BC/MBC | 18 - 28 |
SC/ST | 18 - 31 |
Transgender | 18 - 31 |
Widows | 18 - 37 |
Ex-Service man | Up to 47 |
4. Physical Measurement Test for TNUSRB - Police Constable (PC)
In TNUSRB – Police Constable (PC) physical test, the eligibility of candidates is measured as per height, chest and medical standards.
Height (in cm) | ||
---|---|---|
Category | Male | Female |
General | 170 | 159 |
BC/MBC | 170 | 159 |
SC, SC(A)/ST | 167 | 157 |
Chest (in cm) | ||
---|---|---|
Only for Male | Normal | Expanded |
81 | 86 |
எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டம்.
இரண்டாம் நிலைக் காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை), இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆட்சேர்புக்கான எழுத்துத் தேர்வு இரண்டு நிலைகளைக் கொண்டது.
பகுதி – I
தமிழ் மொழி தகுதித் தேர்வு :
தமிழ் மொழி தகுதித் தேர்வில் தகுதி பெறுவது கட்டாயமாகும். தமிழ் மொழி தகுதித் தேர்வில் குறைந்தபட்சம் 32 மதிப்பெண்கள் ( 40% ) பெற்ற விண்ணப்பதாரர்களுடைய முதன்மை எழுத்து தேர்வின் OMR விடைத்தாள்கள் மட்டுமே மதிப்பீடு செய்யப்படும். இவ்வெழுத்துத் தேர்வுக்கான நேரம் 80 நிமிடங்கள் (1 மணி 20 நிமிடங்கள்) மற்றும் கொள்குறி வகை வினாத்தாளாக, 80 வினாக்கள் கொண்டதாக இருக்கும், ஒவ்வொரு வினாவிற்கும் தலா 1 மதிப்பெண் வழங்கப்படும். மொத்த மதிப்பெண்கள் 80.
தமிழ் மொழி தகுதித் தேர்வுக்கான பாடத் திட்டம் :
தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தின் படி, 10 –ம் வகுப்பு வரை கற்பிக்கப்படும் தமிழ் பாட நூல்களிலிருந்து வினாக்கள் கேட்கப்படும். இதன் பாடதிட்டம் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
1. இலக்கணம் :
எழுத்து இலக்கணம், சொல் இலக்கணம், பொது இலக்கணம், பொருள் இலக்கணம், யாப்பு இலக்கணம், அணி இலக்கணம், மொழித்திறன், பிரித்து எழுதுதல், சேர்த்து எழுதுதல், எதிர்ச்சொல்லை எழுதுதல், பொருந்தாச்சொல்லை கண்டறிதல், பிழைத் திருத்தம், ஆங்கில சொல்லுக்கு நேரான தமிழ் சொல்லை அறிதல் மற்றும் இது சம்மந்தப்பட்ட தலைப்புகள்.
2. இலக்கியம் :
திருக்குறள், தொல்காப்பியம், பராமாயணம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள், அறநூல்கள், பக்தி இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், நாட்டுப்புற இலக்கியங்கள், புதுக்கவிதை, மொழிப்பெயர்ப்பு நூல்கள் ஆகியவை தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புப் பெயர்கள், தொடரை நிரப்புதல் மற்றும் இது சம்மந்தப்பட்ட தலைப்புகள்.
3. தமிழ் அறிஞர்களும் & தமிழ்த்தொண்டும் :
தமிழ் அறிஞர்கள், தமிழின் தொன்மை, தமிழரின் பண்பாடு, தமிழ் உரைநடை, தமிழ்த்தொண்டு, சமுதாயத் தொண்டு தொடர்பான செய்திகள். மேற்கோள்கள் மற்றும் இது சம்மந்தப்பட்ட தலைப்புகள்.
பகுதி – II
முதன்மை எழுத்துத் தேர்வு :
முதன்மை எழுத்துத் தேர்வு 70 மதிப்பெண்கள் கொண்டதாக இருக்கும், இதில் ஒவ்வொரு வினாவிற்க்கும் தலா 1 மதிப்பெண் கொண்ட 70 கொள்குறி வகை வினாக்கள் இருக்கும். இவ்வெழுத்து தேர்வுக்கான நேரம் 80 நிமிடங்கள் (1 மணி 20 நிமிடங்கள்) ஆகும். விண்ணப்பதாரர்கள் முதன்மை எழுத்துத் தேர்வில் தகுதி பெற, குறைந்தபட்சம் 25 மதிப்பெண்கள் (35%) பெற்றிருக்க வேண்டும். முதன்மை எழுத்து தேர்வு கீழ்கண்ட பகுதிகளைக் கொண்டது.
பகுதி (அ) – பொது அறிவு (45 வினாக்கள் – 45 மதிப்பெண்கள்)
பகுதி (ஆ) – உளவியல் தேர்வு (25 வினாக்கள் – 25 மதிப்பெண்கள்)
பகுதி – அ
தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தின் படி 10 ம் வகுப்பு வரை கற்பிக்கப்படும் பாட நூல்களிலிருந்து வினாக்கள் கேட்கப்படும். கீழ்வரும் பாடங்களிலிருந்து வினாக்கள் கேட்கப்படும்.
பொது அறிவியல்
இயற்பியல், வேதியியல், உயிரியல், சூழ்நிலையியல், உணவு & ஊட்டச்சத்தியல்
சமூக அறிவியல்
வரலாறு, புவியியல், இந்திய அரசியல் பொருளாதாரம்.
பொது அறிவு & நடப்பு நிகழ்வுகள் :
அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தின் சமீபகால வளர்ச்சி, இந்தியாவில் அரசியல் வளர்ச்சி, இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் கலை & கலாச்சாரம், விளையாட்டுகள் & தடகள விளையாட்டுகள், தேசிய சர்வதேச விருதுகள், தேசிய & பன்னாட்டு அமைப்புகள். பெயர் சுருக்கங்கள், யார்– யார், புத்தகங்கள் & ஆசிரியர்கள், இந்தியா & அதன் அண்டை நாடுகள் மற்றும் இன்றைய கால இந்தியா.
பகுதி – ஆ
உளவியல் (Psychology)
1. தொடர்பு / தொடர்புகொள் திறன் (Communication Skills) :
தமிழ் மொழியை சிறப்பாக கையாளும் திறன் பற்றி சோதிக்கப்படும்.
2. எண் பகுப்பாய்வு (Numerical Analysis):
எண்ணியல் திறன் தொடர்பாக பதில் அளித்தல் பற்றி சோதிக்கப்படும்.
3. தருக்க பகுப்பாய்பு (Logical Analysis) :
கொடுக்கப்பட்ட கேள்வியில் உள்ள தகவலின் பல்வேறு பரிணாமங்களை கண்டறிய தருக்க ரீதியாக பகுப்பாய்வு செய்தல்.
4. அறிவாற்றல் திறன் (Mental Ability) :
இந்த சோதனையானது, தூண்டல் அல்லது விலக்கு பகுத்தறிவு மூலம் முடிவுகளை எப்படி எடுக்கப்படுகிறது என்ற விண்ணப்பதாரர்களின் திறன் சோதிக்கப்படும்.
5. தகவல்களை கையாளும் திறன் (Information Handling Skills) :
கொடுக்கப்பட்ட தகவலுக்கு, அந்த தகவலின் பல்வேறு அம்சங்கள், அனுமானங்கள் மற்றும் இணைக்கப்பட்ட உண்மைகள் பற்றி சோதிக்கப்படும்.
TNUSRB – Police Constable (PC) Syllabus (PDF)
TNUSRB – Police Constable (PC) Syllabus (PDF)
Physical EFFICIENCY Test
Events (Men) | 1 STAR (4 Marks) | 2 STAR (8 Marks) | |
---|---|---|---|
Rope Climbing | 5.0 m | 6.0 m | |
Long Jump or High Jump | Long Jump | 3.80 m | 4.50 m |
High Jump | 1.20 m | 1.40 m | |
Running 100 m or 400 m | 100 m | 15.00 seconds | 13.50 seconds |
400 m | 80.00 seconds | 70.00 seconds |
Events (Women) | 1 STAR (4 Marks) | 2 STAR (8 Marks) | |
---|---|---|---|
Long Jump | 3.0 m | 3.75 m | |
Short put throw Or Cricket ball throw | Shot – put throw | 4.25 m | 5.50 m |
Cricket ball throw | 17 m | 24 m | |
Running 100 m or 200 m | 100 m | 17.50 seconds | 15.50 seconds |
200 m | 38.00 seconds | 33.00 seconds |
Written Examination Pattern
PART-I:
Tamil Eligibility Test (80 Marks) (Objective type) PASS MARK-32
- Duration : 80 Mins
PART-II
Subject | Questions | Mark |
---|---|---|
General knowledge | 45 | 45 |
Psychology | 25 | 25 |
Total | 70 | 70 |
- Note: No Negative Mark
- Duration : 80 Mins
- Books: 6th to 10th Tamil Nadu School Text Book
NCC /NSS/Sports : 6 Marks
TOTAL MARKS: 70 + 24 + 6 = 100